நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

WHO சீரமைக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

புது டெல்லி:

உலக சுகாதார அமைப்பு WHO சீரமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பான 2ஆவது சர்வதேச மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
 மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றின் சர்வதேச விநியோகத்தை விரைவுபடுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச அளவில் சுகாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்களைப் புகுத்த வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பின் விதிகள், அறிவுசார் சொத்துகளின் காப்புரிமை சார்ந்த வர்த்தக விதிகள் ஆகியவை மேலும் எளிமையாக்கப்பட வேண்டும். மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் சமமாகக் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 90 சதவீத இந்தியர்கள் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் பாரம்பரிய மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset