நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வலியுறுத்தல்

புது டெல்லி:

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள்  9 மாத இடைவெளிக்கு முன்னரே 3ஆவது தவணை கொரோனா தடுப்பூசியான பூஸ்டரை செலுத்திக் கொள்ள இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 18 வயதைக் கடந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.  

9 மாதங்களுக்குப் பிறகே 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.

அதன் காரணமாக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களால் 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாத சூழல் உருவானது.

அதைக் கருத்தில்கொண்டு 3ஆவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான இடைவெளியைக் குறைக்க வேண்டுமெனப் பலரது தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியக் குடிமக்களும் மாணவர்களும் அந்நாடுகளின் விதிமுறைகளின்படி இனி முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset