நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தேசத் துரோக சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை

புது டெல்லி:

தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தை 162-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது.

இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்தச் சட்டத்தை மறுஆய்வு செய்யக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்து வந்தது. பின்னர் தேசத் துரோக சட்டத்தை மறுஆய்வு செய்ய உள்ளதாக கூறிய மத்திய அரசு அதுவரையில் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறியது.

ஆனால், மக்களின் பாதுகாப்புக்காக இந்தச் சட்டங்களை மேலும் பயன்படுத்துவதில் இருந்து ஏன் தடை செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசு 24 மணி நேரம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில், தேசத் துரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து.

இந்தச் சட்டத்தின் கீழ் விசார ணைகள் தொடர்வதையும், கடும் நடவடிக்கைகள் எடுப்பதையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

மேலும், அரசின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் ஒருமைப்பாடு: குடிமக்களின் சிவில் உரிமைகளைக் கவனத்தில் கொண்டு இரண்டையும் சமநிலைப் படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது, மகாராஷ்டிரத்தில் ஹனுமன் சாலீசா ஓதும் விவகாரத்தில் எடுக்கப்பட்டது போன்று. இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படும் உதாரணங்களை அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சுட்டிக்காட்டியது கவனத்தில் கொள்ளப்பட்டது.

124ஏ சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்படும் வரை தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும். விசாரணையை தொடரவும், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வும் மத்திய அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த சட்டப் பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகள், மேல்முறையீடு மற்றும் வழக்குகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எந்தவித பாரபட்சமும் ஏற்படாது என்று நீதிமன்றங்கள் கருதினால், பிற பிரிவுகள் தொடர்பான வழக்கு விசாரணையைத் தொடரலாம்.

தேசத் துரோக சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் முன்மொழியப்பட்ட உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க மத்திய அரசுக்கு அனுமதிக்கப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset