நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

வெளிநாட்டவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு: சுற்றுலாத்துறையினர் வரவேற்பு

கோலாலம்பூர்:

மலேசியாவுக்குள் நுழைய வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை சுற்றுலாத்துறையினர் வரவேற்றுள்ளனர்.

அடுத்த மாதம்  முதல் மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான SOPக்கள் தளர்த்தப்பட்டிருப்பது சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் என அத் துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்கள், மே 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைவதற்காக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது

மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கான காப்பீட்டு நடைமுறைகளும் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாக ஒரு தோற்றம் உருவாகி உள்ள நிலையில், அனைத்துலக அளவில் தற்போது மேற்கொள்ளப்படும் மிகச்சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றை மலேசியாவும் பின்பற்றி சுற்றுலாத்துறையைச் சார்ந்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கத்தின் தலைவர் Tan Kok Liang தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்ட போதிலும், பயணத்துக்கு முன்பும் மலேசியாவுக்கு வந்தடைந்த பின்னும் பரிசோதனை செய்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் மலேசியாவில் தங்களது விடுமுறைக்கான இடமாக தேர்ந்தெடுக்கத் தயங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையானது, வெளிநாட்டுப் பயணிகளை மலேசியரின் பால் ஈர்க்கும் என்றும், இதே போன்று நடவடிக்கையைத்தான் ஐரோப்பிய நாடுகளும், இந்தியா, சிங்கப்பூர் நாடுகளும் எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset