
செய்திகள் வணிகம்
உள்நாட்டு நேரடி முதலீடுகள் வரவேற்று ஊக்குவிக்கப்படும்: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, உள்நாட்டு நேரடி முதலீடுகள் வரவேற்று ஊக்குவிக்கப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இது மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில் சபை பொருளாதார மீட்சி தொடர்பாக அளித்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் நன்கு ஆராயும் என்றும், குறிப்பாக, உள்நாட்டு நேரடி முதலீடுகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
"பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டப் பிரிவு, நிதி அமைச்சு, அனைத்துலக வாணிப மற்றும் தொழில் அமைச்சு ஆகியவை தேசிய வர்த்தக சபையின் பரிந்துரைகளை மேலும் செம்மைப்படுத்தும்.
"நாடு தற்போது தொற்றுடன் வாழப் பழகும் endemic கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதில், உள்நாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதும் ஒன்றாகும்.
"பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் தற்போது மிகச்சிறப்பான நிலையில் உள்ளது. தொழில் துறை தொடர்பான விவகாரங்களை எளிமைப்படுத்துவதன் மூலம், உள்நாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது.
"மலேசிய குடும்பம் என்ற கோட்பாட்டின் நலன் கருதி முன்வைக்கப்படும் அனைத்து ஆலோசனைகளையும் அரசாங்கம் செவிமடுக்கும்," என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm