செய்திகள் வணிகம்
பொருளாதார வளர்ச்சியில் தபுங் ஹாஜி நிறுவனம்; 3.50 சதவீத லாபப்பகிர்வுடன் சாதனை
கோலாலம்பூர்:
தபுங் ஹாஜி நிறுவனம், 2025-ஆம் நிதியாண்டிற்காக 3.50 சதவீத லாபப்பகிர்வை அறிவித்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த லாபப்பகிர்வு விகிதமாகும்.
ஜகாத் வரி செலுத்திய பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த லாபப்பகிர்வு மூலம், நாடு முழுவதும் உள்ள 97 லட்சம் வைப்புதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லாபப்பகிர்வுக்காக மொத்தம் 322 கோடி (RM3.22 billion) ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 2.577 சதவீத ஜகாத் தொகையான 9 கோடியே 53 லட்சம் ரிங்கிட்டைச் செலுத்திய பின்னரே இந்த லாப விகிதம் கணக்கிடப்பட்டுள்ளதாக பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி ஹசன் தெரிவித்தார். 2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 3.25 சதவீதத்தை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தபுங் ஹாஜி நிறுவனத்தின் சிறப்பான நிதி மேலாண்மை, வளர்ச்சியை இந்த உயர்வு பிரதிபலிப்பதாக அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த அறிவிப்பு விழாவில், தபுங் ஹாஜி தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ரஷீத் ஹுசைன், தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தகிம் முஹம்மத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
"மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு என்னை நியமிக்க வேண்டாம்": டாடா சன்ஸ் தலைவர் அறிவிப்பு
July 16, 2026, 5:43 pm
ஜப்பானில் சைபர் தாக்குதல்: நிச்சிரேய் நிறுவனம் பாதிக்கப்பட்டது
July 11, 2026, 7:04 pm
