செய்திகள் வணிகம்
விதியை வென்றாலும் மதியை வெல்ல முடியாது! - டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால்
விதியை வெல்ல முடியாது என்று கூறுவர். எவ்வளவுதான் மதிநுட்பத்துடன் செயல்பட்டாலும், விதி தன் கடமையைச் செய்துவிடும். வரி வசூலும் அப்படித்தான். வரி கொடுப்பதிலிருந்து தப்ப முடியாது.
வருமான வரி, சொத்து வரி என்று பல வழிகளில் அரசு வரி வசூலை செய்து வருகிறது பொருள் சேவை வரிகள் வேறு ரகம். வருமான வரியில் இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகள்.
வரி ஏய்ப்பு, வரி செலுத்தாமை, கால தாமதமாக வரிக் கணக்கை சமர்ப்பிப்பது போன்ற செயல்களினால், வருமான வரி இலாகாவின் நேரடிப் பார்வை மற்றும் சோதனைகளினால்வியாபார நிலைமை மிகவும் பாதிக்கப்படலாம்.
ஒன்று :
வருமான வரித் தகவல் சரியான முறையில் தரப்படவில்லையென்றால், கேள்விக்கு மேல் கேள்விகள் வந்து தொந்தரவு அதிகமாகும். ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்கள் சந்தேகங்களைக் கிளப்பி சோதனைக்கு வழிவகுக்கும்.
இரண்டு :
கணக்கு ஒழுங்காகத் தரப்படவில்லையென்றால், கணக்கு பொருந்த வைக்கும் ஏற்பாடுகள் (audit adjustment) ஒதுக்கப்பட்டு வரி கூட்டப்படுவதுடன், உடனேயே வரி கட்ட வேண்டும் என்ற உத்தரவுடன், தண்ட வரியும் சேர்ந்து வரும். இப்போது தண்ட வரி 45 விழுக்காடு என்பது, வரும் ஆண்டில் 100 விழுக்காடாக மாறும் என்று ஆருடங்கள் கூறுகின்றன. எனவே, உஷாராக இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மூன்று :
வரிக் கணக்குகள் ஒளிவு மறைவு இன்றி துல்லியமாக இருப்பது சாலச் சிறந்தது. "இதை இப்படிக் காட்டலாம்; அதை அப்படிப் போடலாம்!" என்ற ஆலோசனைகளை புறம் தள்ளுவது நல்லது. நேரடிக் கணக்கு ஜோடிக்கப்படாமல் இருந்தால், வரி கூடினாலும், வரியினால் வழுக்கிவிடாமல் இருக்க முடியும். பணமில்லாமல் பொருளாக வருவதற்கும் மதிப்பும் உண்டு, வரியும் உண்டு. அதை விட்டுவிட்டால் வேதனை தேடி வரும்!
நான்கு :
கம்பெனி கட்டாத வரி பாக்கியினால், இயக்குனர்களின் வெளிநாட்டு போக்குவரத்து முடக்கப்படலாம். 'நான் வேறு, நிறுவனம் வேறு' என்ற சட்டக் கொள்கை வருமான வரிச் சட்டத்திற்கு உட்படாது.
இந்த நாட்டிலும் சரி, தமிழகம் இந்தியா மற்றும் அயல் நாடுகளிலும் வருமான வரி வேட்டை வேகமான முறையில் நடைபெற்று வருகின்றது. வரி ஏய்ப்பிற்கு இலக்கு வைத்து செயல்படுவதிலிருந்து தப்ப நேரடி நேர்முக நடவடிக்கைகளில், தகுந்த ஆலோசனைகளுடன் வரி பற்றிய 'வருமுன் காப்போம்' என்ற ஏற்பாடு நலம் பயக்கும்.
தொடர்புடைய செய்திகள்
January 27, 2026, 2:21 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக 3.96 நிலையில் வலுவாகத் தொடரும் ரிங்கிட்
January 26, 2026, 1:59 pm
மலேசிய விமானங்களில் இளநீர் விற்பனை: உலக சந்தையை நோக்கும் உள்ளூர் தொழில்முனைவோர்
January 21, 2026, 9:56 am
இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவால் ரூ.10 லட்சம் கோடி இழப்பு: முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி
January 5, 2026, 11:20 am
வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு
January 2, 2026, 3:46 pm
சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்
December 31, 2025, 12:43 pm
இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
