நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

கொரோனாவை பரப்புகிறதா 5ஜி? வடஇந்தியாவெங்கும் பரவும் புரளி

புதுடெல்லி:

உலகம் முழுக்க சில செய்திகள் குறிப்பிட்ட நேரங்களில் தீயாகப் பரவி எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன என்பதற்கு கொரோனாவுக்கும் 5ஜி தொலைத் தொடர்பு டவர்களுக்கும் உள்ள ஒற்றுமையே சாட்சி.

கொரோனா கடந்த 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மிகத் தீவிரமாக பரவியபோது, 5ஜி தொலைத் தொடர்பு கோபுரங்களால் கொரோனா பரவுவதாக ஒரு தகவல் அங்கே தீவிரமாகப் பரவியது. 
 
இப்போது இதே வதந்தி ஒரு வருடம் கழித்து இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலுக்கு 5ஜி டவர்களே காரணம் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது. 5ஜி சோதனை ஆங்காங்கே மேற்கொள்ளப்படுவதால் அதன் கதிரியக்கத்தின் காரணமாக கொரோனா இரண்டாம் அலை பரவுகிறது என்று பலமாக விவாதங்கள் எழுந்தன.

இதை நம்பி ஆங்காங்கே 5ஜி தொலைத் தொடர்பு டவர்கள் தீ வைத்து கொளுத்தப்பட வேண்டும் என்றும் இடித்து தள்ளப்பட வேண்டும் என்றும் வடமாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன,

இந்நிலையில் இன்று (மே 19) இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. 5ஜியினால் கொரோனா பரவவில்லை என்று கூறி இருக்கிறது.

“ஐந்தாவது தலைமுறை 5ஜி கைபேசி கோபுரங்களின் சோதனையால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் பரவியிருப்பதாக தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வரு கின்றன. இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.

5ஜி தொழில்நுட்பத்திற்கம் கொரோனா தொற்றின் பரவலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன், இதுபோன்ற தவறான தகவல்களை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற புரளிகளுக்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை. மேலும் 5ஜி இணைப்பின் சோதனை இன்னும் இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை. எனவே இதுபோன்ற கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை” என்று தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset