செய்திகள் மலேசியா
சுங்கைபூலோ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 குடும்பங்களுக்கு 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவிகள்: டத்தோஸ்ரீ ரமணன்
சுங்கைபூலோ:
சுங்கைபூலோ, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 குடும்பங்களுக்கு, மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் எச்ஆர்டி கோர்ப்பின் சந்துனி காசே மடானி திட்டத்தின் மூலம் சுமார் 1 மில்லியன் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும், வீடுகளில் சேதமடைந்த அத்தியாவசியப் பொருட்களை மாற்றுவதற்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு உதவித் தொகுப்பிலும் எரிவாயு அடுப்பு, எரிவாயு, மின்சாரக் கேத்தல், குக்கர், மிக்ஸி உள்ளிட்ட அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
கம்போங் மெலாயு சுபாங், கம்போங் குபு காஜா, கம்போங் பாயா ஜெராஸ் ஹிலிர், கம்போங் மெர்பாவ் செம்பாக், கம்போங் சுங்கை பெலோங், கம்போங் பாயா ஜாராஸ் தெங்கா, கம்போங் பாயா ஜெராஸ் டாலாம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன.
சமூக நலனில் அக்கறை கொண்ட பொறுப்புள்ள நிறுவனமாகத் தனது பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களை எச்ஆர்டி கோர்ப் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக இந்த உதவி வழங்கும் நிகழ்வில் எச்ஆர்டி கோர்ப் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ ஷாமிர் உட்பட பலர் பங்கேற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2026, 4:24 pm
இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்: பிரதமர்
November 14, 2026, 4:22 pm
செமினியில் கணவன், மனைவி தற்கொலை: இணைய பகிடிவதை காரணமா?
November 14, 2026, 1:30 pm
மடானி அரசாங்கத்துடன் கைகோர்த்து தீபாவளி திருநாளை இன்னும் பிரமாண்டமாக கொண்டாடுவோம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
November 14, 2026, 11:53 am
தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பிரதமர் தலைமையேற்றார்
November 13, 2026, 11:43 pm
காடேக்கில் நடராஜா உட்பட தேசிய முன்னணி வேட்பாளர்களை பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: துவான் இப்ராஹிம்
November 13, 2026, 11:24 pm
இந்தியர்களுக்கு பாஸ் கட்சி அச்சுறுத்தல் அல்ல; காடேக்கில் நடராஜாவின் வெற்றியை உறுதி செய்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 13, 2026, 7:18 pm
