செய்திகள் மலேசியா
செமினியில் கணவன், மனைவி தற்கொலை: இணைய பகிடிவதை காரணமா?
காஜாங்:
செமினியில் உள்ள ஒரு வீட்டில் கணவன், மனைவியான யோஹன் முனியன், ராஜேஸ்வரி அன்பழகன் ஆகியோர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இணைய பகிடிவதை காரணமாக இவர்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
செமினி பெரானாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் தாசேக் கெசுமாவில் உள்ள ஒரு வீட்டில், நேற்று இவர்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
டிரெட்ஸ் தளத்தில் பல பயனர்கள் பதிவேற்றிய பதிவுகளின் அடிப்படையில், அந்தத் தம்பதியினர் புகைப்படக் கலைஞர்களாகவும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர், உதவி ஆணையர் நாஸ்ரான் அப்துல் யூசோப், நேற்று மாலை 6.31 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் தமது துறைக்குக் கிடைத்ததாகக் கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், 30 வயதுகளில் உள்ள தம்பதியினர், வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு தனி அறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
முதற்கட்ட ஆய்வின் முடிவுகளில், இதில் குற்றச் செயல் நடந்ததற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய, இரு உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை முடிவுகள், மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், இதுவரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று நாஸ்ரான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2026, 4:24 pm
இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்: பிரதமர்
November 14, 2026, 1:30 pm
மடானி அரசாங்கத்துடன் கைகோர்த்து தீபாவளி திருநாளை இன்னும் பிரமாண்டமாக கொண்டாடுவோம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
November 14, 2026, 11:53 am
தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பிரதமர் தலைமையேற்றார்
November 13, 2026, 11:43 pm
காடேக்கில் நடராஜா உட்பட தேசிய முன்னணி வேட்பாளர்களை பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: துவான் இப்ராஹிம்
November 13, 2026, 11:24 pm
இந்தியர்களுக்கு பாஸ் கட்சி அச்சுறுத்தல் அல்ல; காடேக்கில் நடராஜாவின் வெற்றியை உறுதி செய்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 13, 2026, 7:18 pm
