செய்திகள் மலேசியா
மடானி அரசாங்கத்துடன் கைகோர்த்து தீபாவளி திருநாளை இன்னும் பிரமாண்டமாக கொண்டாடுவோம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
பிரிக்பீல்ட்ஸ்:
மடானி அரசாங்கத்துடன் கைகோர்த்து தீபாவளி திருநாளை இன்னும் பிரமாண்டமாக கொண்டாடுவோம்.
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.
மடானி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெறுவது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
குறிப்பாக, பிரதமரின் வருகையானது நாட்டில் வாழும் இந்தியச் சமூகத்திற்கும் தீபாவளிப் பெருவிழாவிற்கும் கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரமாகும்.
மேலும், இந்தியச் சமூகத்தின் மீதான மடானி அரசாங்கத்தின் அக்கறையையும் அன்பையும் இது வெளிப்படுத்துகிறது.
இவ்வேளையில், இந்தச் சிறப்பான ஏற்பாட்டிற்காகப் பிரதமர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பல இன மக்களின் பெருநாட்களை பன்முகத்தன்மையுடன் கொண்டாடும் ஒரே நாடு மலேசியா மட்டுமே.
ஆக வரும் காலங்களில் மடானி அரசாங்கத்துடன் கைகோர்த்து தீபாவளி திருநாளை இன்னும் பிரமாண்டமாக கொண்டாடுவோம்.
இதற்கு மக்கள் அனைவரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வேளையில் ஒட்டுமொத்த மலேசிய இந்தியச் சமூகத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2026, 4:24 pm
இந்திய சமூகத்தின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும்: பிரதமர்
November 14, 2026, 4:22 pm
செமினியில் கணவன், மனைவி தற்கொலை: இணைய பகிடிவதை காரணமா?
November 14, 2026, 11:53 am
தேசிய அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பிரதமர் தலைமையேற்றார்
November 13, 2026, 11:43 pm
காடேக்கில் நடராஜா உட்பட தேசிய முன்னணி வேட்பாளர்களை பாஸ் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: துவான் இப்ராஹிம்
November 13, 2026, 11:24 pm
இந்தியர்களுக்கு பாஸ் கட்சி அச்சுறுத்தல் அல்ல; காடேக்கில் நடராஜாவின் வெற்றியை உறுதி செய்வோம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 13, 2026, 7:18 pm
