நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிரக்கணக்கான மீன்கள் சாலையில் சிதறிக் கிடந்தன

பாகான் டத்தோ:

ஊத்தான் மெலிந்தாங்கிற்கு அருகிலுள்ள கம்போங் கோத்தா அருகே ஒரு லோரி கவிழ்ந்ததில், ஆயிரக்கணக்கான மீன்கள் சாலையில் சிதறிக் கிடந்தன.

மாலை சுமார் 6.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜாலான் பெரியின் 29ஆவது கிலோமீட்டரில், சபாங் பெர்னாம் செல்லும் சாலையில் சிறிய அளவிலான மீன்கள் நிறைந்திருப்பதைக் காட்டும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின.

பின்புற இடது டயர் கழன்றதால் லோரி சறுக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பாகான்  டத்தோ மாவட்ட போலிஸ் தலைவர் முகமது அலி முகமது ஜாலி தெரிவித்தார்.

இந்த விபத்தால் பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ சேதம் ஏற்படவில்லை.

மீன் ஏற்றிச் சென்ற லோரியின் ஓட்டுநரான 39 வயது நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset