நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக எந்தக் காரணமும் இல்லை: ஜாஹித்

மலாக்கா:

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி, டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்குத் தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், தேசிய முன்னணி அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலக எந்தக் காரணமும் இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் ஜசெக அமைச்சர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் முன்மாதிரியைப் பின்பற்றி அமைச்சரவையிலிருந்து விலக வேண்டும்.

ஜசெக தலைவரும் டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் தியோ ராஜினாமா அவசியம் என்று கருதினால், ஜசெக அமைச்சர்கள்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset