நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் மருத்துவமனை நிபுணர்களால் போலிஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டது

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மருத்துவமனை நிபுணர்களால் போலிஸ் அதிகாரியின் துண்டிக்கப்பட்ட கை வெற்றிகரமாக மீண்டும் இணைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மத் இதனை உறுதிப்படுத்தினார்.

கெப்போங் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற சம்பவத்தில் போலிஸ்  அதிகாரியின் கை துண்டிக்கப்பட்டது.

அக்கையை கோலாலம்பூர் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவக் குழு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்துள்ளது.

டாக்டர் ஆலன் ரவி ராஜகோபால் தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவினர் இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

மருத்துவக் குழுவின் திறமை, அர்ப்பணிப்பு, நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் காவல்துறை அதிகாரியின் கையை மீண்டும் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகப் பாராட்டப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset