நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிப்பாங்கில் மின்னல் தாக்கி மூவர் பலி

சிப்பாங்:

பண்டார் பாரு சாலாக் திங்கியில் மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை நடந்தது உண்மைதான்.

எங்கள் தரப்பு பின்னர் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும். என்று அவர் இன்று கூறினார்.

முன்னதாக, ஒரு மரத்தின் அடியில் துணியால் மூடப்பட்ட மூன்று உடல்கள் கிடப்பதைக் காட்டும் பல காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவின.

அப்பகுதிவாசிகள், அவ்வழியே சென்ற சாலைப் பயனாளர்கள் பல புகைப்படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றிய பிறகு, இந்தச் சம்பவம் வைரலாகத் தொடங்கியது.

இருப்பினும், தற்போதைக்கு, சம்பவம் நடந்த சரியான நேரத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset