நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபாவளி விடுமுறை முடிவு: இன்று திரும்பும் பயணத்தில் நெரிசல் - LLM எச்சரிக்கை

கோலாலம்பூர்:

இன்று காலை 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய விரைவுச்சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்தது.

ஆனால், தீபாவளி, கூடுதல் பள்ளி விடுமுறையை முடித்துவிட்டு வாகன ஓட்டிகள் திரும்புவதால், இன்று பிற்பகலில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*யோங் பெங் - ஆயர் ஹித்தாம் இடையே விபத்தால் நெரிசல்*

இருப்பினும், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (PLUS), தெற்கு நோக்கி செல்லும் பகுதியில், யோங் பெங்கிலிருந்து ஆயர் ஹித்தாம் நோக்கி செல்லும் பாதையில் விபத்து காரணமாக நெரிசல் ஏற்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் (LLM) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கிலோமீட்டர் 82.3-இல் நடந்த அந்த விபத்தில் ஒரு லாரியும் காரும் மோதிக் கொண்டன. ஆனால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

காலை 10 - 11 மணிக்குள் போக்குவரத்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி வரும் போக்குவரத்தில் இன்னும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என சிசிடிவி கண்காணிப்பு காட்டுவதாகவும், இன்று கூடுதல் விடுமுறை இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

"வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையிலிருந்து கூட்டாட்சி தலைநகருக்கு வாகன ஓட்டிகள் திரும்புவதால், காலை 10 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.

சமீபத்திய தகவல்களுக்கு

பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்து தகவல்களை பெற, LLM-இன் கட்டணமில்லா உதவி எண் *1800-88-7752*-ஐ அழைக்கலாம்.

வாகன ஓட்டிகள் பயணத்தை திட்டமிட்டு, கவனமாக வாகனம் ஓட்டி, பாதுகாப்பான இடைவெளியை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset