நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் வெள்ள பாதிப்புக்கு ஆளானோருக்கு கூடுதலாக.2,500 ரிங்கிட் உதவி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலா சிலாங்கூர்:

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியான குடும்பங்களுக்கு கூடுதலாக RM. 2,500 ரொக்க உதவி வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இந்த உதவி நாளை, நவம்பர் 10-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேதமான பொருட்களை மாற்ற உதவி

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தில் சேதமடைந்த அல்லது அழிந்த அத்தியாவசிய வீட்டு பொருட்களை மாற்ற இந்த உதவி பயன்படும் என கூறப்பட்டுள்ளது.

தகுதி நிபந்தனைகள், வழங்கும் முறை குறித்த விவரங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் அறிவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் குடும்ப தலைவருக்கும் இந்த ஒரு முறை சிறப்பு உதவி வழங்கப்படும்.

*வெள்ள தடுப்பு திட்டங்களை விரைவுபடுத்த உத்தரவு*

தொடர்ந்து ஏற்படும் வெள்ளத்தை தடுக்க, வெள்ள தடுப்பு திட்டங்களை விரைவுபடுத்துமாறும் அன்வார் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரண மையங்களில் பாதிப்பு இரட்டிப்பு

இன்று காலை 215 பேராக இருந்த சிலாங்கூர் வெள்ள பாதிப்பு எண்ணிக்கை, மதியம் 3.40 மணி நிலவரப்படி 163 குடும்பங்களை சேர்ந்த 583 பேராக இரட்டிப்புக்கு மேல் அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கோலா சிலாங்கூரில் உள்ள நான்கு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மாநில அரசு ஆகியவை வெள்ள பாதிப்புக்கு ஆளானோருக்கு RM.1,500 வரை உதவி வழங்கும் என கூறியிருந்தார். தற்போது அறிவிக்கப்பட்ட RM.2,500 உதவி அதற்கு கூடுதலானது.

கோலா சிலாங்கூரில் உள்ள SK பாரிட் மகாங் தற்காலிக நிவாரண மையத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளானோரை அன்வார் நேரில் சந்தித்தார். அங்கு பணியாற்றும் அனைத்து பணியாளர்கள், தன்னார்வலர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset