நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் விவகாரம்; தவறு மிகவும் வெளிப்படையானது: சட்டத்துறை தலைவர்

புத்ராஜெயா:

டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ நீதித்துறை ஆவணங்களைத் தயாரிப்பதில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முழுமையான செயல்பாடு குறித்து தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முஹம்மது டுசுகி மொக்தார் கேள்வி எழுப்பினார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ஆவணம் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு விவரமும் கவனமாக ஆராயப்பட்டிருந்தால், அதில் கண்டறியப்பட்ட பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.

அந்த ஆவணத்தில் உள்ள குறைபாடுகள், குறிப்பாக சட்ட விதிகள் தொடர்பானவை. அது தெளிவாகத் தெரிகின்றன.

சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்னும் கவனமாக இருந்திருந்தால் இந்த விவகாரம் நடந்திருக்காது. 

அந்தத் தவறு மிகவும் வெளிப்படையாக இருந்ததுடன், தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர்  மீது விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதம், அம்னோவால் தொடங்கப்பட்ட நஜிப் ரசாக் ஒற்றுமை நிதியிலிருந்து செலுத்தப்பட்ட பிறகு, உயர் நீதிமன்றத்தால் இந்த ஆவணம் வெளியிடப்பட்டது.

நஜிப் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான நிபந்தனைகளில் அபராதத் தொகையைச் செலுத்துவதும் ஒன்றாகும்.

இருப்பினும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனைக்குட்பட்ட பொது மன்னிப்பு உத்தரவின் உண்மையான விளக்கம் குறித்து அரசுத் தரப்பு மேலும் தெளிவு பெறுவதற்கு ஏதுவாக சட்டத்துறை தலைவர் அலுவலகம் வீட்டுக் காவலை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset