செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி வேட்பாளராக நீக்கப்பட்டது சுலைமானின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்: முஹம்மத் ஹசான்
ஜாசின்:
லெண்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி நீக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி நிலவியது.
அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் இதனை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், தேசிய முன்னணி வேட்பாளர் அப்துல் ஹக்கீம் அப்துல் வாஹித்தின் பிரச்சாரத்திற்கு உதவ சுலைமானே நேரில் வந்தபோது நிலைமை சீரடைந்துள்ளது.
வேட்பாளர் நியமனத்திற்குப் பிறகு அதிருப்தி ஏற்படுவது இயல்பானதுதான்.
ஆனால் தனது வாரிசுடன் சுலைமான் உடனிருந்தது, கட்சிக்கான ஆதரவை வலுப்படுத்த அவரும் உதவியுள்ளார் என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு தலைவருக்கும் அல்லது ஆதரவாளர்கள் இருப்பது உண்மை தான்.
ஆனால் வேட்பாளர் ஹக்கீமுடன் சுலைமானும் இருப்பது, வேட்பாளர் வேட்புமனுவிற்குப் பிறகு அலைகள் அல்லது சிற்றலைகள் ஏற்படுவது இயல்பானது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
- பார்ற்றிபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 6:55 pm
சிப்பாங்கில் மின்னல் தாக்கி மூவர் பலி
November 9, 2026, 6:53 pm
கைரிக்கு நன்றி; காடேக்கில் எண் 4க்கிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்: நடராஜா
November 9, 2026, 6:47 pm
சிலாங்கூர் வெள்ள பாதிப்புக்கு ஆளானோருக்கு கூடுதலாக.2,500 ரிங்கிட் உதவி: பிரதமர் அன்வார் அறிவிப்பு
November 9, 2026, 12:15 pm
நஜிப் விவகாரம்; தவறு மிகவும் வெளிப்படையானது: சட்டத்துறை தலைவர்
November 9, 2026, 10:56 am
