செய்திகள் மலேசியா
தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பு பல்வேறு இனத் தலைவர்களை ஒன்றிணைக்கிறது; ஒற்றுமை மடானி உணர்வைப் பிரதிபலிக்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்புகள் ஒற்றுமை மடானி உணர்வைப் பிரதிபலிக்கிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மலேசியா மடானி தொலைநோக்குப் பார்வையின் கீழ், ஒற்றுமை, நல்லிணக்க உணர்வுடன் டத்தோஸ்ரீ ரமணனின் திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது.
இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது,
பிரதமரின் வருகையானது, பன்முகத்தன்மை கொண்ட நாடாக மலேசியாவிற்கு இருக்கும் தனித்துவமான அடையாளத்தை எடுத்துக் காட்டுவதாகவும், இது ஒன்றிணைப்பு, சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை ஆகிய விழுமியங்களை தொடர்ந்து நிலைநிறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் அன்வார் தனது குடும்பத்தின் தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்டது தங்களுக்குக் கிடைத்த பெரும் கௌரவம் என்று குறிப்பிட்ட அவர்,
இது நாட்டின் பல்லின சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதில் தேசியத் தலைவர்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
மலேசியா உண்மையிலேயே ஒரு தனித்துவமான சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.
இனம், மதம், கலாச்சார ரீதியாக நாம் வேறுபட்டிருக்கலாம்.
ஆனால், பண்டிகைக் காலங்கள் வரும்போது, நாம் அனைவரும் ஒரே பெரிய மலேசியக் குடும்பமாக இணைந்து கொண்டாடுகிறோம்.
இந்தியச் சமூகத்தின் மீது பிரதமருக்கு இருக்கும் அக்கறை, அவர் தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதில் மட்டுமல்லாமல், கல்வி, பொருளாதாரம், குடும்ப நல்வாழ்வு போன்ற விவகாரங்களில் இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் உண்மையான தேவைகள் மற்றும் சவால்கள் மீது அவர் காட்டும் கவனத்திலும் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 12:15 pm
நஜிப் விவகாரம்; தவறு மிகவும் வெளிப்படையானது: சட்டத்துறை தலைவர்
November 9, 2026, 10:56 am
தீபாவளி விடுமுறை முடிவு: இன்று திரும்பும் பயணத்தில் நெரிசல் - LLM எச்சரிக்கை
November 9, 2026, 10:21 am
நஜிப் மன்னிப்பு விவகாரம்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி உறவை பாதிக்கப்படவில்லை: ஜாஹித்
November 9, 2026, 9:57 am
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்: இஸ்மாயில் லசிம்
November 9, 2026, 9:52 am
