செய்திகள் மலேசியா
கைரிக்கு நன்றி; காடேக்கில் எண் 4க்கிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்: நடராஜா
காடேக்:
மலாக்கா தேர்தலில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் எண் 4க்கிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அத்தொகுதி தேசிக முன்னணி வேட்பாளராக நடராஜா செல்லப்பா கூறினார்.
காடேக் நாடாளுமன்றத் தொகுதி, கோலா ஈனாவில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கலந்து கொண்டது மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் புத்ரி, மகளிர், இளைஞர் அணியினர், மூத்த குடிமக்கள், குடும்பங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
காடேக் நாடாளுமன்றத் தொகுதியின் எதிர்காலம், மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மக்களை நேரில் சந்தித்து, தேர்தல் களத்தில் பணியாற்றும் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் உற்சாகம் அளித்த கைரிக்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, அவர்களுக்கான உண்மையான சேவையை வழங்குவதே முதிர்ச்சியான அரசியலின் அடையாளம் என்பதை கைரி தனது உரையின் மூலம் நினைவூட்டினார்.
காடேக் நாடாளுமன்ற த் தொகுதியில் திரண்ட நீல நிறக் கடல் போன்ற மக்கள் கூட்டமும், 4ஆம் என்ற எண்ணைக் குறிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட கரங்களும் எனது மக்கள் பணிக்கான உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளன.
மேலும் நாளை நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஆக வாக்களிக்கத் தகுதியுடைய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
குறிப்பாக தேசிய முன்னணி எண் 4 வேட்பாளரான எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 6:55 pm
சிப்பாங்கில் மின்னல் தாக்கி மூவர் பலி
November 9, 2026, 6:47 pm
சிலாங்கூர் வெள்ள பாதிப்புக்கு ஆளானோருக்கு கூடுதலாக.2,500 ரிங்கிட் உதவி: பிரதமர் அன்வார் அறிவிப்பு
November 9, 2026, 5:34 pm
தேசிய முன்னணி வேட்பாளராக நீக்கப்பட்டது சுலைமானின் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்: முஹம்மத் ஹசான்
November 9, 2026, 12:15 pm
நஜிப் விவகாரம்; தவறு மிகவும் வெளிப்படையானது: சட்டத்துறை தலைவர்
November 9, 2026, 10:56 am
