நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குடியிருப்பாளர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை: தீயணைப்புப் படை

ஷாஆலம்:

சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், ஷாஆலம் பகுதியைச் சுற்றியுள்ள தாமான் ஸ்ரீ மூடா, செக்‌ஷன் 25 உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இதுவரை குடியிருப்பாளர்கள் யாரும் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் இல்லை.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பர் இதனை கூறினார்.

செக்‌ஷன் 26இல் உள்ள கம்போங் பாரு ஹைகோமிலும் இதேபோன்ற சம்பவம் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள பல சாலைகளில் நீர் வழிந்தோடியதற்கு, வடிகால்கள் நிரம்பி வழிந்ததே காரணம் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மழை நின்ற பிறகு வானிலை சீரடைந்துள்ளது.

ஆனால் அபாயத்தில் உள்ள பல பகுதிகளில் கண்காணிப்பு இன்னும் தொடர்கிறது.

கவனம் செலுத்தப்படும் இடங்களில் ஜாலான் கெபூன் பூங்கா, செக்‌ஷன் 22, செக்‌ஷன் 13, ஜாலான் கெபூன் ஆகியவை அடங்கும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்ர்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset