நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் மீதான குடும்ப வன்முறை விசாரணை அறிக்கை: போலிஸ் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைத்தது

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப வன்முறை வழக்கு குறித்த விசாரணையை போலிஸ் நிறைவு செய்தது.

அதன் விசாரணை ஆவணங்களை போலிஸ் வழக்கறிஞரிடம் ஒப்படைத்துள்ளது.

இந்த முன்னேற்றத்தை உறுதிப்படுத்திய பினாங்கு போலிஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம், மேலதிக நடவடிக்கை மற்றும் கூடுதல் அறிவுறுத்தல்களுக்காக விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில், தம்பதியினர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குடும்ப வன்முறை வழக்கு தொடர்பாக, பினாங்கு சட்டமன்ற உறுப்பினர், அவரது மனைவி உட்பட நான்கு நபர்களிடம் போலிஸ் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset