செய்திகள் மலேசியா
கடந்த வெள்ளிக்கிழமை நஜிப்பை வீட்டிற்கு வரவேற்க குடும்பத்தினர் தயாராகினர்; ஆனால் அது வீணானது: நூர்யானா நஜ்வா
அலோர்காஜா:
டத்தோ நஜிப் ரசாக்கின் குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அவரை வீட்டிற்கு வரவேற்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஆனால் அவர் இன்னும் காஜாங் சிறையில் இருந்ததால் அவர்களின் நம்பிக்கை தகர்ந்தது.
முன்னாள் பிரதமருக்கு எதிரான வீட்டுக் காவலை அமல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடமிருந்து சமீபத்திய தகவல்களுக்காக இதுவரை காத்திருப்பதால், முழு குடும்பமும் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது என்று அவரது மகள் நூர்யானா நஜ்வா நஜிப் கூறினார்.
நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறோம்.
கடந்த வெள்ளிக்கிழமை என் தந்தையின் வருகையை வரவேற்க நாங்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த நம்பிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
தற்போது, டத்தோஸ்ரீ நஜிப் இன்னும் காஜாங் சிறையில்தான் இருக்கிறார்.
மேலும் அதிகாரிகளிடமிருந்து வரும் சமீபத்திய தகவல்களுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்.
மலாக்கா மச்சாப் ஜெயா மாநில சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு உதவியபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 12:15 pm
நஜிப் விவகாரம்; தவறு மிகவும் வெளிப்படையானது: சட்டத்துறை தலைவர்
November 9, 2026, 10:56 am
தீபாவளி விடுமுறை முடிவு: இன்று திரும்பும் பயணத்தில் நெரிசல் - LLM எச்சரிக்கை
November 9, 2026, 10:21 am
நஜிப் மன்னிப்பு விவகாரம்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி உறவை பாதிக்கப்படவில்லை: ஜாஹித்
November 9, 2026, 9:57 am
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்: இஸ்மாயில் லசிம்
November 9, 2026, 9:52 am
