நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புதன்கிழமை வரை 4 மாநிலங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கிளந்தான், பகாங், சபா,  திரெங்கானுவில் புதன்கிழமை வரை பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மெட் மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கிளந்தனில் உள்ள தானா மேரா, பாசிர் மாஸ், தும்பாட், கோத்தா பாரு, மச்சோங், பச்சோக், பாசிர் பூத்தே, கோல கிராய், ஜெலி ஆகியவை அடங்கும் என்று அறிவித்தது.

பகாங்கில், குவாந்தன், பெக்கான், ரொம்பின் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகளாகும்.

அதே நேரத்தில் இந்த எச்சரிக்கை முழு திரெங்கானுவையும் உள்ளடக்கியது.

இதற்கிடையில், சபாவில், குடாட், சண்டகான் சம்பந்தப்பட்ட இடங்களில் தொடர் கனமழை எச்சரிக்கை நாளை முதல் புதன்கிழமை வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சமீபத்திய வானிலை தகவல்களை அதிகாரப்பூர்வ MetMalaysia இணையதளம், சமூக ஊடகங்கள் , myCuaca மொபைல் செயலி வழியாகப் பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset