நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்: இஸ்மாயில் லசிம்

சிரம்பான்:

மாநிலத்தின் ஆளுநர் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் தானாகவே கலைக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லசிம் இதனை வலியுறுத்தினார்.

திட்டமிட்டபடி நெகிரி செம்பிலான் பட்ஜெட் 2027-ஐ தாக்கல் செய்ய ஏதுவாக, சட்டமன்றக் கூட்டம் நடைபெறுவதை உறுதிசெய்ய மாநில அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்.

இறைவன் நாடினால், சட்டமன்றம் கலைக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். 

சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கான தேதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

பட்ஜெட், சட்டமன்றம் கலைக்கப்படும் சிக்கலைத் தவிர்ப்பதற்காக, அதைச் செயல்படுத்த எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம்.

சிரம்பானில் தீபாவளி கொண்டாட்டங்களை முன்னிட்டு, இந்திய சமூக விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர் டத்தோ வி.எஸ். மோகனின் இல்லத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

மாநில அரசு முன்னதாக, சட்டமன்ற கூட்டத் தொடருக்கான தேதியாக நவம்பர் 26-ஐயும், நெகிரி செம்பிலான் பட்ஜெட் 2027-ஐ தாக்கல் செய்வதற்கான தேதியாக நவம்பர் 27-ஐயும் நிர்ணயித்திருந்தது.

இருப்பினும், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரின் ஒப்புதலை மாநில அரசு இன்னும் பெறவில்லை என்று அறியப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset