நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் மன்னிப்பு விவகாரம்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி உறவை பாதிக்கப்படவில்லை: ஜாஹித்

இஸ்தான்புல்:

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளிடையே நிலவும் அரசியல் கருத்து வேறுபாடுகள், நிலைப்பாடுகள், அரசாங்கத்தின் சுமூகமான நிர்வாகத்தைப் பாதிக்கவில்லை.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி  தலைவருமான டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

அரசாங்கத்தில் தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகியவற்றுக்கு இடையேயான பணி உறவு சிறப்பாகவே நீடிக்கிறது.

அமைச்சுகளிம் நிர்வாகம், அமைச்சரவைக் கூட்டங்கள் சுமூகமாகவும் தொழில்முறை ரீதியாகவும் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.

எங்கள் உறவில் எந்தச் சிக்கலும் இல்லை. நாங்கள் அமைச்சுகளை நிர்வகித்து வருகிறோம்.

ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துகிறோம். அரசாங்க விவகாரங்களும் நிர்வாகமும் தொழில்முறை ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகளோ அல்லது மோதல்களோ ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

துருக்கியில் அவர் மேற்கொண்ட நான்கு நாள் பணிப்பயணம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset