செய்திகள் மலேசியா
புரூணையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மலேசியருக்கு இரண்டு குற்றப் பதிவுகள் உள்ளன: ஹுசைன் ஒமார் கான்
கோலாலம்பூர்:
கடந்த அக்டோபர் 31 அன்று சரவாக்கில் உள்ள புருனே-மிரி எல்லையில் உள்ள சுங்கை துஜோ சோதனைச் சாவடியில், 100 கிலோ கிராமுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான ஷாபு போதைப்பொருளுடன் புரூணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மலேசிய நபருக்கு, ஏற்கனவே இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.
மிரியைச் சேர்ந்த 46 வயதான அந்த நபர் கைது செய்யப்பட்டபோது, அவர் சபாவுக்குச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
சுமார் 100 கிலோ எடையுள்ள, சுமார் 5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான ஷாபு போதைப்பொருளுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டது குறித்து புருனே போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்திடம் இருந்து தனது தரப்புக்குத் தகவல் கிடைத்தது.
புரூணை அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி, அந்த நபர் சரவாக்கின் மிரியிலிருந்து நாட்டிற்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.
மேலும், மலேசியாவிற்குள் மீண்டும் நுழைவதற்கு முன்பு, அவர் இந்த நாட்டை ஒரு இடைவழிப் பாதையாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2026, 12:15 pm
நஜிப் விவகாரம்; தவறு மிகவும் வெளிப்படையானது: சட்டத்துறை தலைவர்
November 9, 2026, 10:56 am
தீபாவளி விடுமுறை முடிவு: இன்று திரும்பும் பயணத்தில் நெரிசல் - LLM எச்சரிக்கை
November 9, 2026, 10:21 am
நஜிப் மன்னிப்பு விவகாரம்; தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி உறவை பாதிக்கப்படவில்லை: ஜாஹித்
November 9, 2026, 9:57 am
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்: இஸ்மாயில் லசிம்
November 9, 2026, 9:52 am
