நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் வீடு திரும்பியதும் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதம் நடைமுறைக்கு வரும்: அந்தோனி லோக்

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வீட்டுக் காவலுக்காகத் தனது இல்லத்திற்கு வந்தவுடன், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து எனது ராஜினாமா கடிதம் நடைமுறைக்கு வரும்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை உறுதிப்படுத்தினார்.

2022இல் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜசெக பொதுச் செயலாளரான இவர், நஜிப்பிற்கு நிபந்தனை மன்னிப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ராஜினாமா செய்தார்.

50 மில்லியன் ரிங்கிட் செலுத்தும் தொகை இன்று காலை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்டது என்று நான் புரிந்துகொள்கிறேன் என்று அந்தோனி லோக் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

நஜிப் வந்து வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தவுடன், எனது ராஜினாமா நடைமுறைக்கு வரும்.

நான் இன்று இரவு வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தால், இன்றிரவே அது நடைமுறைக்கு வரும்.

நாளை என்றால், நாளை. நான் பிரதமருக்கு ஒரு கூடுதல் கடிதம் அனுப்புவேன்.

நஜிப் காஜாங் சிறையிலிருந்து வெளியேறிவிட்டதாக ஊடகச் செய்திகள் கூறினாலும், அவர் முதலில் திட்டமிடப்பட்ட பரிசோதனைக்காக ஒரு பல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் வீட்டிற்கு அனுப்பப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset