நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிஎஸ்ஏ ஒரு புதிய விஷயம் அல்ல; தேர்தலுக்குப் பிறகு விரோதப் போக்கைக் கடைப்பிடிக்க எந்தக் காரணமும் இல்லை: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

நம்பிக்கை, ஆதரவு ஒப்பந்தம் (சிஎஸ்ஏ) ஒரு புதிய விஷயம் அல்ல.

ஆகஸ்ட் 2021 முதல் அக்டோபர் 2022 வரை தான் அரசாங்கத்தை வழிநடத்தியபோது தனது நிர்வாகமே இதைத் தொடங்கியது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தொடர்ந்து விரோதப் போக்கைக் கடைப்பிடிக்க எந்தக் காரணமும் இல்லை.

இந்த விஷயமே நம்பிக்கை ஆதரவு ஒப்பந்தத்திற்கு அடிப்படையாக உள்ளது என்று அவர் கூறினார்.

தேர்தலின் போது, ​​நாம் கருத்து வேறுபாடு கொள்ளலாம்.

ஆனால் இந்தத் தேர்தலுக்கு வெளியே, நாம் விரோதப் போக்கைத் தொடர எந்தக் காரணமும் இல்லை.

தேசிய முன்னணி டுரியான் துங்கால் வேட்பாளர் முஸ்தபா மூசாவுடன் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, முடிந்தால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset