நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கான நோட்டீஸ் எங்களுக்குக் கிடைக்கவில்லை: நம்பிக்கை கூட்டணி

சிரம்பான்:

மாநில அரசு நவம்பர் 26 அன்று கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்த போதிலும், நெகிரி செம்பிலானில் உள்ள 11 நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில சட்டமன்றக் கூட்டம் தொடர்பான தகவல்களோ அல்லது அறிவிப்புகளோ கிடைக்கவில்லை.

மாநில சட்டமன்றக் கூட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு 28 நாட்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜே. அருள்குமார் கூறினார்.

சட்டமன்றக் கூட்டத்தொடரின் தேதியிலிருந்து 28 நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

இன்றுவரை எங்களுக்கு அந்த அறிவிப்போ அல்லது தகவலோ கிடைக்கவில்லை. 

ஒருவேளை அவர்கள் அதை ஓரிரு நாட்களுக்குள் அனுப்பினால், அவர்கள் மாநில அரசு நிர்ணயித்தபடி நவம்பர் 26 அன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாது. 

ஏனெனில், 28 நாள் காலக்கெடு ஏற்கெனவே கடந்துவிட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset