செய்திகள் மலேசியா
பரவாயில்லை; நஜிப்பிற்காக 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவது அம்னோவின் முடிவு: பிரதமர்
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு ஏதுவாக, 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவதற்கான அம்னோவின் முடிவை மதிக்கிறேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார். மதிக்கிறார்.
இந்த முடிவு அம்னோவின் உரிமை.
இதன் மூலம் அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு இணங்க சட்ட நடைமுறைகளையும் மாமன்னரின் முடிவுகளையும் மதிக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
அது அம்னோவின் முடிவாக இருந்தால் பரவாயில்லை. அவர்கள் 50 மில்லியன் ரிங்கிட் செலுத்த விரும்புகிறார்கள். அது அவருடைய வேலையாகும்.
எனது தனிப்பட்ட கருத்தில், நான் இதை ஏற்கவில்லை.
ஏனெனில், பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள ஊழல் நடவடிக்கைகளை அப்படியே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்தக் கூடாது
இங்குள்ள தாமான் கோசாஸ் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
பரவாயில்லை
நஜிப்பிற்காக 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தும் அம்னோவின் முடிவை நான் மதிக்கிறேன். பரவாவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 11:14 pm
நஜிப் வீடு திரும்பியதும் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதம் நடைமுறைக்கு வரும்: அந்தோனி லோக்
November 6, 2026, 10:24 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் நிறுத்தி வைப்பு: அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC)
November 6, 2026, 4:23 pm
அந்தோனி லோக் பதவி விலகுவாரா?
November 6, 2026, 3:59 pm
காஜாங் சிறையிலிருந்து காரில் வெளியே வந்த நஜிப்
November 6, 2026, 1:22 pm
நஜிப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை அம்னோ செலுத்தியது
November 6, 2026, 11:38 am
