நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்தோனி லோக் பதவி விலகுவாரா?

கோலாலம்பூர்:

நஜிப்பின் வீட்டுக் காவலைத் தொடர்ந்து பதவி விலகும் வாக்குறுதியை போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்  நிறைவேற்றுவாரா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

தனது சிறைத் தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக் காவலில் கழித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சின் கவனத்தின் மையமாக உள்ளது.

நஜிப் வீட்டுக் காவலுக்காக சிறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டவுடன் தனது ராஜினாமா நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் முன்னதாக உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இது கவனத்தை ஈர்த்தது.

அமைச்சின் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக லோக் தற்போது தனது அலுவலகத்தில் இருப்பதாகத் தெரிய வருகிறது.

பிற்பகல் 2.50 மணி நிலவரப்படி, நஜிப் வீட்டுக் காவல் விவகாரத்தின் முன்னேற்றம் குறித்த லோக்கின் நிலைப்பாட்டை அறிந்துகொள்வதற்காக ஊடகப் பணியாளர்கள் அமைச்சக வளாகத்தில் இன்னும் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset