செய்திகள் மலேசியா
நஜிப்பின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை அம்னோ செலுத்தியது
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் 50 மில்லியம் ரிங்கிட் இன்று காலை செலுத்தப்பட்டதாக அம்னோ உறுதிப்படுத்தியது.
டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் வீட்டுக் காவலில் இருப்பதற்கான ஒரு நிபந்தனையாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டிய அனைத்து கட்டணச் செயல்முறைகளையும் இன்று காலை முடித்துவிட்டதாக அம்னோ உறுதிப்படுத்தியது.
முன்னாள் அம்னோ தலைவருக்கு உதவுவதற்காக செப்டம்பர் 18 அன்று தொடங்கப்பட்ட 'நஜிப் ரசாக் ஒற்றுமை நிதி' மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதித் தொகை, அதன் இலக்கை ஏற்கனவே எட்டியுள்ளது.
அது போதுமானதாக உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறினார்.
இதனிடையே, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமருக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை, இங்குள்ள உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் இன்று சற்று நேரத்திற்கு முன்பு அவர் செலுத்தி முடித்துவிட்டார் என்பதை நஜிப்பின் வழக்கறிஞர் முஹம்மது ஃபர்ஹான் ஷாபியும் உறுதிப்படுத்தினார்.
ஆம், நான் அதை செலுத்திவிட்டேன் என்று அவர் சுருக்கமாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2026, 11:14 pm
நஜிப் வீடு திரும்பியதும் அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதம் நடைமுறைக்கு வரும்: அந்தோனி லோக்
November 6, 2026, 10:24 pm
நஜிப்பின் வீட்டுக் காவல் நிறுத்தி வைப்பு: அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (AGC)
November 6, 2026, 4:23 pm
அந்தோனி லோக் பதவி விலகுவாரா?
November 6, 2026, 4:09 pm
பரவாயில்லை; நஜிப்பிற்காக 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்துவது அம்னோவின் முடிவு: பிரதமர்
November 6, 2026, 3:59 pm
காஜாங் சிறையிலிருந்து காரில் வெளியே வந்த நஜிப்
November 6, 2026, 11:38 am
