நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களுக்கு இன்று முதல் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எஸ்டிஆர் உதவித் தொகையை பெறுவார்கள்: பிரதமர்

பிரிக்பீல்ட்ஸ்:

வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைச் சமாளிக்க மக்களுக்கு உதவும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எஸ்டிஆர் உதவித் தொகை நாடு முழுவதும் உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த பயனாளிகள் உள்ளடங்குவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்களின் நலனை, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட பிரிவினரின் நலனை உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த உதவி பிரதிபலிக்கிறது.

எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை, மொத்தம் 1.1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான எஸ்டிஆர் உதவித்தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு வழங்கப்படும் என்பதை நான் அறிவிக்கிறேன்

பிரிக்பீல்ட்ஸில் தீபாவளி மெகா சந்தை நிகழ்வின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset