நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலவச நிதியைச் சார்ந்திருப்பதைவிடத் திட்டமிட்டு நிலையான வணிகங்களை உருவாக்குவது முக்கியம்: மனிதவள அமைச்சர் ரமணன்

கோலாலம்பூர்:

சமூக முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்று மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராம கிருஷ்ணன் வலியுறுத்தினார். 

பிற சமூகங்களுடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக, தங்கள் சமூகத்தை உயர்த்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றார் அவர்.

மித்ரா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி சரியாகப் பயன்படுத்தப்பட்டதால், அதற்கான ஒதுக்கீடு RM100 மில்லியனிலிருந்து RM150 மில்லியனாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உயர்த்தினார். 

பள்ளிகள் மற்றும் பிற சமூக அமைப்புகளுக்கான நிதியையும் நமது அரசு தாராளமாக வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

மானியங்கள் மட்டுமல்லாமல், கடன்களும் இதில் அடங்கும் என்றும், இலவச நிதியைச் சார்ந்திருப்பதைவிடத் திட்டமிட்டு நிலையான வணிகங்களை உருவாக்குவது முக்கியம் என்றும் அவர் கூறினார். 

B40 பிரிவினருக்கான திட்டத்தை அடுத்த ஆண்டும் தொடர விரும்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தீபாவளிப் பெருநாள் குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் ஒன்றுகூடி மகிழும் நேரம் என்று அமைச்சர் வாழ்த்தினார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்தியச் சமூகத்திற்கு ஆதரவளித்த ஊடகங்களுக்கு நன்றி கூறியதுடன், உண்மையான செய்திகளை வெளியிடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இன்று தீபாவளியை முன்னிட்டு ஊடகங்களுக்கான ஒன்றுகூடல் விருந்து நிகழ்ச்சியை மனிதவள அமைச்சர்  மினாரா பெர்கெசோவில் நடத்தி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset