செய்திகள் மலேசியா
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
ஷாஆலம்:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் உள்ள தேவையுடைய குடும்பங்களுக்கு ரொக்கப் பண உதவியும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந்நலத் திட்டத்தின் மூலம், பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்குச் சிறிய அளவிலாவது உதவிக்கரம் நீட்டி, அவர்களும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட உதவுவதே நோக்கமாகும்.
இந்த நலத்திட்டத்திற்கான முழுச் செலவினையும் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஏற்றுக்கொண்டது.
இத்தகைய முயற்சிகள் மாநகராட்சியின் சமூக அக்கறையையும், தேவையுடைய மக்களின் நலனில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
பண்டிகைக் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவுதல், அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய நற்பண்புகளை இத்தகைய நலத்திட்டங்கள் மேலும் வளர்க்கும் என நம்புகிறோம்.
இந்த நலத்திட்டத்தைச் சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய ஷாஆலம் மாநகர் மன்றம், அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் என உதவி பெற்றவர்கள் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 1:37 pm
அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது
November 4, 2026, 11:03 am
220 மில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய சரக்கு விவகாரம்; எம்ஏசிசி மறுஆய்வு செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 4, 2026, 10:30 am
7 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியர் மீது விசாரணை: 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 4, 2026, 10:28 am
நஜிப் இன்று 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துகிறார்?
November 4, 2026, 10:24 am
ஷாஆலமில் திடீர் வெள்ளம்: பிரதான சாலைகள் மூடப்பட்டன, கடுமையான போக்குவரத்து நெரிசல்
November 4, 2026, 8:43 am
