நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது

தெலுக் இந்தான்:

தெலுக் இந்தானில் உள்ள ஒரு கடைக்கு முன்னால், ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று பிற்பகல் 3.53 மணிக்கு பொதுமக்களிடமிருந்து போலிஸ்க்கு அழைப்பு வந்ததாக ஹிலிர் பேராக் போலிஸ் தலைவர் சுவா கோக் லியான் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், 48 வயதான பாதிக்கப்பட்டவர் மூன்று பேரால் அரிவாள்களைப் பயன்படுத்தித் தாக்கப்பட்டதும், சிகிச்சைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்காக, விசாரணைக்கு உதவுவதற்காக 27 வயது உள்ளூர் பெண் ஒருவரை போலிசார் கைது செய்தனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset