செய்திகள் மலேசியா
ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ இந்தியர்களுக்காக ம.இ.கா தொடர்ந்து குரல் கொடுக்கும்: கூட்டரசு பிரதேச MIC செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தகவல்
கோலாலம்பூர்:
ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ இந்தியர்களுக்காக ம.இ.கா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் இந்தியர்களின் தாய்க்கட்சியாக என்றும் ம.இ.கா விளங்கும் என்றும் கூட்டரசு பிரதேச ம.இ.கா செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் கூறினார்
நாடு தழுவிய நிலையில் தீபாவளி பெருநாளை முன்னிட்டு இந்தியர்களுக்கு பொருட்கள், வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் நேற்றிரவு PPR GOMBAK SETIA BLOK 41 பகுதியில் தீபாவளியை முன்னிட்டு வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அம்னோ, ம.இ.கா தொகுதி தலைவர்கள் யாவரும் கலந்து கொண்டு வேஷ்டி, சேலைகளை இந்தியர்களுக்கு வழங்கினர்.
இவ்வேளையில் வங்சா மாஜு ம.இ.கா தொகுதி தலைவர் நாகேந்திரன் அவர்களுக்கும் அம்னோ தொகுதியின் துணைத்தலைவர் டத்தோ நோர் ஷாம் அவர்களுக்கும் கூட்டரசு பிரதேச ம.இ.கா தலைவர் டத்தோ ராஜா சைமன் அவர்களுக்கும்ஆறுமுகம் நன்றி தெரிவித்துக் கொண்டார்
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எங்களுக்கும் மென்மேலும் ஊக்கமளித்து கொண்டிருக்கும் ம.இ.கா தேசிய தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன், தேசிய துணைத்தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இருவருக்கும் ஆறுமுகம் நன்றி சொன்னார்.
தீபாவளிக்கான பாரம்பரிய வேஷ்டி, சேலைகளை ஹரே கிருஷ்ணா பட்டுமாளிகை வழங்கி ஆதரவு நல்கியது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 1:37 pm
அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது
November 4, 2026, 11:06 am
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
November 4, 2026, 11:03 am
220 மில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய சரக்கு விவகாரம்; எம்ஏசிசி மறுஆய்வு செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்
November 4, 2026, 10:30 am
7 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியர் மீது விசாரணை: 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 4, 2026, 10:28 am
நஜிப் இன்று 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துகிறார்?
November 4, 2026, 10:24 am
ஷாஆலமில் திடீர் வெள்ளம்: பிரதான சாலைகள் மூடப்பட்டன, கடுமையான போக்குவரத்து நெரிசல்
November 4, 2026, 8:43 am
