செய்திகள் மலேசியா
நம்பிக்கை அலுவலகத்திற்குத் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை
பூச்சோங்:
மலேசியாவின் தமிழ் ஊடகங்களில் முதன்மை ஊடகமான நம்பிக்கை ஊடகத்திற்கு நாட்டின் தொடர்பு துறை அமைச்சின் துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை புரிந்தார்
மாலை 4.15 மணிக்கு நம்பிக்கை அலுவலகத்திற்கு வந்த துணையமைச்சரை நம்பிக்கை ஊடகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி குமாரி தனலெட்சுமி வடிவேலு, நம்பிக்கையின் செய்தி ஆசிரியர் திரு ஃபிதாவுல்லாஹ் இருவரும் வரவேற்றனர்.
நம்பிக்கை ஊடகத்தின் செய்தி போக்குகள், செய்தியின் அங்கங்கள், நம்பிக்கையின் சமூக ஊடக பக்கங்கள் குறித்து செய்தி ஆசிரியர் ஃபிதாவுல்லாஹ் துணையமைச்சர் தியோ நீ சிங்கிடம் விளக்கமளித்தார்
மேலும், நம்பிக்கை ஊடகம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் நம்பிக்கை விருதுகள் விழா குறித்த சிறப்பு காணொலிகள் அனைத்தையும் துணையமைச்சர் தியோ நீ சிங் பார்வையிட்டார்
நம்பிக்கை ஊடகத்தின் செய்திகளும் அதன் அகபக்கங்களில் உடனுக்குடன் செய்திகளை வெளியிடும் நம்பிக்கை ஊடகத்திற்கு துணையமைச்சர் தியோ நீ சிங் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிறகு அனைத்து நம்பிக்கை ஊடக பணியாளர்களுக்கும் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 6:24 pm
ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம்: பெர்மிம் பேரவை வலியுறுத்தல்
November 4, 2026, 1:37 pm
அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது
November 4, 2026, 11:06 am
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
November 4, 2026, 11:03 am
