செய்திகள் மலேசியா
ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம்: பெர்மிம் பேரவை வலியுறுத்தல்
கோலாலம்பூர்:
பூச்சோங்கில் செயல்பட்டு வந்த ஒரு கோழி இறைச்சி விநியோக நிறுவனத்தில் ஹலால் நடைமுறைகள் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையை பெர்மிம் (மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை) வரவேற்றுள்ளது.
பொது மக்களின் நம்பிக்கையையும் நாட்டின் ஹலால் சான்றிதழ் அமைப்பின் மதிப்பையும் பாதுகாக்கும் நோக்கில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்த மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜாய்ஸ்) மற்றும் அது தொடர்புடைய அமலாக்க அதிகாரிகளுக்கு பெர்மிம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டது.
பெர்மிம் தேசியத் தலைவர் முஹம்மது அஸ்மான் ஷா கூறுகையில்:
"ஹலால் சான்றிதழ் என்பது ஒரு வணிக அனுமதி மட்டுமல்ல. அது முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையோடும் இஸ்லாமிய மதிப்புகளோடும் தொடர்புடைய ஒரு புனிதமான பொறுப்பாகும். ஹலால் நடைமுறைகளை மீறுவோர் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளே மற்ற தொழில்துறையினருக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமையும்."
மேலும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் மலேசியாவின் இஸ்லாமிய அடையாளத்திற்கும் உலகளாவிய ஹலால் மையம் என்ற அந்தஸ்திற்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், ஹலால் சான்றிதழ் மீதான உள்ளூர், சர்வதேச நுகர்வோரின் நம்பிக்கையும் குறையக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஹலால் வழங்கல் சங்கிலியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசாங்கமும் அமலாக்க அமைப்புகளும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெர்மிம் தலைவர் அஸ்மான் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2026, 5:15 pm
நம்பிக்கை அலுவலகத்திற்குத் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை
November 4, 2026, 1:37 pm
அரிவாளால் ஒருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவ பெண் கைது
November 4, 2026, 11:06 am
தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
November 4, 2026, 11:03 am
