நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்களுக்கான பெர்கேசோ பங்களிப்பை செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

தொழிலாளர்களுக்கான பெர்கேசோ பங்களிப்பை செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

உள்நாட்டு தொழிலாளர்களுக்கான பெர்கேசோ பதிவு,  பங்களிப்புத் தொகை செலுத்தும் கடமைகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.

2026 நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, 10,033 தொழிலாளர்களின் முதலாளிகள் பெர்கேசோவில் பதிவு செய்தல் அல்லது பங்களிப்புத் தொகை செலுத்துதல் தொடர்பான சட்டக் கடமைகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் முக்கிய பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுத்துறை, தனியார் துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள் என 598 உயர்மட்ட நபர்களும் தங்களது கடமைகளை நிறைவேற்றாதது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், 26,669 முதலாளிகள் பங்களிப்புத் தொகை நிலுவையில் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ஒருவரின் பதவி, அந்தஸ்து, செல்வாக்கு அல்லது அதிகாரம் ஆகியவை சட்டப்பூர்வக் கடமைகளைப் புறக்கணிப்பதற்கான காரணங்களாக இருக்க முடியாது.

சட்டம் அனைவருக்கும் சமமானது. சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை.

தொழிலாளர்களின் நலன் குறித்து பேசுவதற்கு முன்பு, வீட்டில் பணியாற்றும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் முதலாளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெர்கேசோ பங்களிப்பை செலுத்தாதவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்கு அவகாசம் வழங்கப்படுகிறது.

அதற்குள் தொழிலாளர்கள் பங்களிப்பை அவர்கள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset