நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

220 மில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய சரக்கு விவகாரம்; எம்ஏசிசி மறுஆய்வு செய்ய வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கோலாலம்பூர்: 

பெட்ரோலிய சரக்குகளின் ஆவணங்களுக்கும் அவற்றின் உண்மையான நகர்வுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகத் தாம் அளித்த புகாரை எம்ஏசிசி மறுஆய்வு செய்ய வேண்டும்.

மேரிடைம் நெட்வோர்க்  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் இதனை வலியுறுத்தினார்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி அளிக்கப்பட்ட புகார், ஜொகூரின் தஞ்சோங் லாங்சாட் துறைமுகத்தில் இறக்கப்பட்ட இரண்டு பெட்ரோலிய சரக்குகள் தொடர்புடையது. 

மொத்தம் 76,954.325 மெட்ரிக் டன் Atlanta Crude கொண்ட அவற்றின் அறிவிக்கப்பட்ட மதிப்பு 220 மில்லியன் ரிங்கிட்டாகும்.

இறக்குமதி ஆவணங்களை மாற்றுதல், மதிப்பு மற்றும் அளவைக் குறைத்துக் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து சுங்கத்துறை வெளியிட்ட தகவல்களைத் தொடர்ந்து, தனது புகாரிலும் மேலாய்வு தேவையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேமிப்புத் தொட்டிகளில் ஏற்கெனவே இருந்த இருப்பு, புதிதாகச் சேர்க்கப்பட்ட சரக்கு, கலப்பு நடவடிக்கைகள், பின்னர் வெளியேற்றப்பட்ட அளவு ஆகியவற்றின் பதிவுகளைச் சரிபார்க்க வேண்டும்.

தங்களது நிறுவனம் கப்பல் முகவராக மட்டுமே செயல்பட்டதாகவும் தெரிவித்தார். 

இவை புகாரில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள்; முறைகேடு நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset