செய்திகள் இந்தியா
பாஜக எதிர்ப்பால் நடிகையின் தீபாவளி விழிப்புணர்வு விடியோ நீக்கம்: மீண்டும் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
மும்பை:
பட்டாசு வெடிக்க வேண்டாம் என்ற பாலிவுட் நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு விடியோவை பாஜக கண்டனத்தை தொடர்ந்து மும்பை மாநகராட்சி நீக்கிய நிலையில், மீண்டும் பதிவேற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மும்பை மாநகரில் காற்றுமாசு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி சார்பில் ‘மாசு இல்லா தீபாவளி’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு தொடங்கப்பட்டது.
இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகையும் இந்தியாவுக்கான ஐ.நா. சுற்றுச்சூழல் தூதருமான தியா மிர்சாவிடம் விழிப்புணர்வு விடியோ பெற்ற மும்பை மாநகராட்சி சமூக ஊடகங்களில் பகிர்ந்தது.
இந்த நிலையில், மும்பை பாஜக தலைவர் அமீத் சதம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்று தியா மிர்சாவிடமிருந்து நாங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் பாரம்பரியங்கள் எங்கள் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியவை” என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும், தியா மிர்சாவின் விடியோவுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த விழிப்புணர்வு விடியோவை உடனடியாக மும்பை மாநகராட்சி சமூக ஊடகப் பக்கங்களில் இருந்து நீக்கியது.
தியா மிர்சாவின் விழிப்புணர்வு விடியோவை நீக்கியதற்கு மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2026, 3:39 pm
சவூதிக்கான விமான சேவைகளை தொடா்ந்து ரத்து செய்யும் இந்திய விமான நிறுவனங்கள்
November 1, 2026, 7:00 pm
இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி
October 31, 2026, 6:03 pm
இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மோதிய ஹெலிகாப்டர்: 6 பேர் பலி
October 31, 2026, 12:30 pm
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை மையம்
October 30, 2026, 11:07 pm
Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
October 30, 2026, 9:06 pm
பூட்டானில் பெருக்கெடுத்த ஏரி: இந்தியாவில் வெள்ள அபாயம்
October 28, 2026, 4:34 pm
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
October 27, 2026, 4:14 pm
