செய்திகள் இந்தியா
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
புதுடெல்லி:
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டி தொடரில் இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனுடைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மூன்று முறை தங்கம் வென்ற 42 வயதான இந்திய தடகள வீரரான நீரஜ் யாதவ் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார். இதனால், அவருக்குப் போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், அய்ச்சி - நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இந்த நிலையில், கடுமையான மன உளைச்சலில் இருந்த நீரஜ் யாதவ், தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவலை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ். சத்யநாராயணா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2026, 4:14 pm
இந்தியா வந்துள்ள உலகின் பணக்கார நாட்டின் தலைவர்
October 27, 2026, 12:20 pm
பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
October 22, 2026, 6:31 pm
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
October 21, 2026, 10:34 pm
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்திய அரசு மீது ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டு
October 19, 2026, 6:10 pm
இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை
October 19, 2026, 3:22 pm
டெல்லி விமான நிலையத்தில் 3.2 கிலோ தங்கக்கட்டிகள்: துபாயிலிருந்து கடத்தி வந்தவர் சிக்கினார்
October 19, 2026, 10:31 am
சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம்
October 18, 2026, 10:20 am
