நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சவூதிக்கான விமான சேவைகளை தொடா்ந்து ரத்து செய்யும் இந்திய விமான நிறுவனங்கள்

ஜித்தா:

பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் தொடா்ந்து ரத்து செய்து வருகின்றன.

வளைகுடா பிராந்தியத்தில் பரந்த மோதலுக்கு மத்தியில், யேமனின் ஹூதி அமைப்பினா், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்துகின்றனா்.

இதன் காரணமாக, சவூதியில் சிக்கியுள்ள இந்தியப் பயணிகளுக்கு உதவ உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து தொடா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவையை இந்திய நிறுவனங்கள் தொடா்ந்து ரத்து செய்து வருகின்றன.

ஜித்தா, ரியாத், தம்மாம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் அங்கிருந்து புறப்படும் விமானங்களை நவம்பர் 14 வரை ரத்து செய்வதாக, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன்னா் அறிவித்தன.

இந்நிலையில், ஜித்தா நகருக்கான விமான சேவையை நவம்பர் 18 வரையும், ரியாத் நகருக்கான விமான சேவையை நவம்பர் 30 வரையும் ரத்து செய்வதாக ஆகாசா ஏா் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இந்தியர்களும் உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளவர்களும் நாடு திரும்ப முயற்சித்து வருகின்றார்கள்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset