செய்திகள் இந்தியா
பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டதுபோல் இந்தியாவில் தீபாவளிக்கு முன்னதாக ரூ.10, ரூ.20, ரூ.50க்குத் தட்டுப்பாடு ஏற்படுமா?: வாட்சப் தகவலால் மக்கள் பதற்றம்
புதுடெல்லி:
பணப்புழக்கத்தை ஆர்பிஐ குறைக்கவிருப்பதாகவும், அதனால் தீபாவளிக்கு முன்னதாக ரூ.10, ரூ.20, ரூ.50 தாள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்று வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் தகவல் மக்களிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறாதவர்கள், எவ்வாறு தீபாவளிக்கு பொருள்கள் வாங்குவது என்ற அச்சத்தில் உள்ளனர்.
அதாவது, ஆர்பிஐ வெளியிட்டதாக ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ரூ.10, ரூ.20, ரூ.50 தாள்களை தீபாவளிக்கு முன்னதாக, புழக்கத்திலிருந்து மெல்ல குறைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.
தீபாவளி நெருங்கும் நேரத்தில், வியாபாரிகள் மற்றும் மக்களை இந்த தகவல் வெகுவாகப் பாதித்துள்ளது. அது மட்டுமல்லாமல், நவ. 8ஆம் தேதி ஏற்கனவே பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட நாள் என்பதால், இந்த தகவலும் அந்த நாளை குறிவைத்திருப்பதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
ஆனால், இது தொடர்பாக பரவும் தகவல் உண்மையில்லை, போலி செய்தி என்று பிஐபி உண்மை அறியும் சோதனைக் குழு உறுதி செய்திருப்பதோடு, பணப்புழக்கத்தை குறைப்பது குறித்து ஆர்பிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியிருக்கிறது.
எனவே, வாட்ஸ்ஆப் என்றில்லை, சமூக வலைத்தளங்களில் எந்த தகவல் பரவினாலும், மக்கள் அது உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளாமல் யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2026, 11:02 pm
பாஜக எதிர்ப்பால் நடிகையின் தீபாவளி விழிப்புணர்வு விடியோ நீக்கம்: மீண்டும் பதிவேற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
November 2, 2026, 3:39 pm
சவூதிக்கான விமான சேவைகளை தொடா்ந்து ரத்து செய்யும் இந்திய விமான நிறுவனங்கள்
November 1, 2026, 7:00 pm
இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி
October 31, 2026, 6:03 pm
இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மோதிய ஹெலிகாப்டர்: 6 பேர் பலி
October 31, 2026, 12:30 pm
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை மையம்
October 30, 2026, 11:07 pm
Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
October 30, 2026, 9:06 pm
பூட்டானில் பெருக்கெடுத்த ஏரி: இந்தியாவில் வெள்ள அபாயம்
October 28, 2026, 4:34 pm
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
October 27, 2026, 4:14 pm
