செய்திகள் இந்தியா
Toyota Fortuner காரைப் பரிசாய் வென்ற 6 வயதுச் சிறுவன்
புர்ஹான்பூர்:
இந்தியாவில் பாட்டி வாங்கிய 200 ரூபாய் அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டு, 6 வயதுப் பேரனுக்கு Toyota Fortuner காரைப் பரிசாகப் பெற்றுத்தந்துள்ளது.
மெதான்ஷ் ராய்க்வார் (Medansh Raikwar) என்ற அந்தச் சிறுவன் மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரைச் (Burhanpur) சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரது பாட்டி 200 ரூபாய்க்குச் சீட்டு வாங்கிப் பேரனின் பெயரைப் பதிவு செய்திருந்தார்.
அண்மையில் நடந்த அதிர்ஷ்டக் குலுக்கில் மெதான்ஷின் வென்றதும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஈராண்டாகக் கார் வாங்கத் திட்டமிட்டிருந்த குடும்பத்துக்கு அது எதிர்பாராத பரிசாக அமைந்தது.
மேளதாளத்துடன் மெதான்ஷுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
200 ரூபாய் சீட்டுக்குப் பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் கிடைத்த செய்தி இணையவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2026, 12:30 pm
வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது: வானிலை மையம்
October 30, 2026, 9:06 pm
பூட்டானில் பெருக்கெடுத்த ஏரி: இந்தியாவில் வெள்ள அபாயம்
October 28, 2026, 4:34 pm
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
October 27, 2026, 4:14 pm
இந்தியா வந்துள்ள உலகின் பணக்கார நாட்டின் தலைவர்
October 27, 2026, 12:20 pm
பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
October 22, 2026, 6:31 pm
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
October 21, 2026, 10:34 pm
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்திய அரசு மீது ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டு
October 19, 2026, 6:10 pm
இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை
October 19, 2026, 3:22 pm
