செய்திகள் இந்தியா
இந்தியா வந்துள்ள உலகின் பணக்கார நாட்டின் தலைவர்
புது டெல்லி:
லிக்டென்ஸ்டைன் (Liechtenstein) நாட்டின் பரம்பரை இளவரசரும் செயல் அதிபருமான அலாய்ஸ் தனது மனைவி ஃசோபி உடன் 04 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
லிக்டென்ஸ்டைன் ஒரு குட்டி பணக்கார நாடு.
ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் நடுவில், ஆல்ப்ஸ் மலைக்கு மத்தியில் இந்த அழகிய குட்டி நாடு அமைந்துள்ளது.
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு வெறும் 160 சதுர கி.மீ.
அதாவது திருச்சி மாநகரத்தை விட சின்னது.
ஆனால் உலகின் 6-வது சிறிய நாடு.
நாட்டின் மக்கள் தொகை:
39,000 பேர் தான்.
அதாவது திருச்சியில் உள்ள உறையூர் மக்கள் தொகையின் மொத்த அளவுதான் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவு.
இந்த நாட்டிற்கு சொந்த நாணயம் கூட இல்லை, சுவிஸ் நாணயத்தை தான் பயன்படுத்துகிறார்கள்
உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று.
வரி குறைவு என்பதால் உலகின் பெரிய கம்பெனிகள் 73,000 கம்பெனிகள் அங்கு பதிவு செய்துள்ளன.
அதவாது மக்களை விட கம்பெனிகள் அதிகம்.
போலீஸ் வெறும் 120 பேர் தான்.
இந்த நாட்டிற்கு ராணுவமே கிடையாது.
1868-லேயே ராணுவத்தை கலைத்து விட்டார்கள்.
70,000 டாலர் கொடுத்தால் ஒரு நாள் முழு நாட்டையும் வாடகைக்கு எடுக்கலாம் .
இந்த நாட்டில் இன்று வரை மன்னராட்சிதான்.
இளவரசர் குடும்பம் தான் நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர்.
இந்த நாட்டில் குற்றம் மிகவும் குறைவு என்பதால் ஜெயில் கூட காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலக வரைபடத்தில் புள்ளி மாதிரி தெரியும், ஆனால் பணத்தில் மலை மாதிரி நாடு இது
1993-ல் தான் இந்தியா-லிக்டென்ஸ்டைன் இடையிலான நட்பு ஆரம்பித்தது
கடந்த ஆண்டுதான் சுவிட்சர்லாந்து, நார்வே,
லிக்டென்ஸ்டைன் உள்ளிட்ட 04 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ரமேஷ் ஹனி குமார்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2026, 4:34 pm
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை
October 27, 2026, 12:20 pm
பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
October 22, 2026, 6:31 pm
பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிவு
October 21, 2026, 10:34 pm
போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்திய அரசு மீது ஐநா நிபுணர்கள் குற்றச்சாட்டு
October 19, 2026, 6:10 pm
இந்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை
October 19, 2026, 3:22 pm
டெல்லி விமான நிலையத்தில் 3.2 கிலோ தங்கக்கட்டிகள்: துபாயிலிருந்து கடத்தி வந்தவர் சிக்கினார்
October 19, 2026, 10:31 am
சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம்
October 18, 2026, 10:20 am
