நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பூட்டானில் பெருக்கெடுத்த ஏரி: இந்தியாவில் வெள்ள அபாயம்

புது டெல்லி:

பூட்டானில் ஓர் ஏரி நிரம்பி வழிந்தோடியதில் இந்தியாவின் சில மாநிலங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அசாம், மேற்கு வங்காள  மாநிலங்கள் விழிப்புநிலையில் உள்ளன.

பூட்டானின் வடமேற்கில் சிந்தாப்பூ ஏரி நிரம்பி வழிந்தது.

பனிப்பாறை உருகி நிரம்பும் அந்த ஏரி நேற்றிரவு கரைபுரண்டோடியது.

இந்திய, சீன எல்லையோரத்தில் உள்ள காசா ஸட்சு (Gasa Tshachu)   வெந்நீரூற்றுச் சுற்றுலாத்தலமும் பாதிக்கப்பட்டது.

அங்கு இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பூட்டான் அரசாங்க கூறியுள்ளது.

அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset